பீகாரில் பயங்கரம்.! 1,710 கோடி ரூபாய் பாலம்.. ஆற்றுக்குள் நொறுங்கி விழுந்த சம்பவம்.! பதைபதைக்க வைக்கும் வீடியோ…

Bihar bridge collapse

பீகாரில் மாநிலத்தில் 1,710 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் ஆற்றுக்குள் நொறுங்கி விழுந்தது.

பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில், ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் எனும் ஊர்களை ஒன்றிணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே அரசு புதிய பாலத்தை ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டி வந்தது.

அப்போது நேற்று திடீரென இந்த பாலத்தின் சில பகுதிகள் நொறுங்கி ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் சிலர் விடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு உள்ளனர். இந்த பாலம் இடிந்து விழுவதும் இது முதல்முறையல்ல. ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல பாலத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுமான பணியின் போதே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்