ஒடிசா ரயில் விபத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் செய்தி.!
ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நேற்றய நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,000 பேர் காயம் அடைந்துள்ளனர். மொத்தம் 1,175 பேர் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, இதுவரை 793 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர்.
இந்த கோர விபத்து இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியாவை உலுக்கிய இந்த ஒடிசா ரயில் விபத்துக்கு உலக தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல் செய்தியை பகிர்ந்து வர்கிறார்கள். அந்த வகையில், இது குறித்து ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து பற்றிய சோகமான செய்தியால் தாங்கள் இருவரும் மனம் உடைந்ததாக கூறியுள்ளனர்.
ஒடிசா ரயில் விபத்துக்கு வெள்ளை மாளிகை இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள்ளது. அந்த அறிக்கையில், தங்கள் அன்பானவர்களை இழந்தவர்களுக்கும், இந்த பயங்கரமான சம்பவத்தில் காயமடைந்த பலருக்கும் எங்கள் பிரார்த்தனைகளை பகிர்ந்து கொள்கிறோம்.
அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளையும் மீண்டும் இணைக்கும் குடும்பம் மற்றும் கலாச்சாரத்தின் உறவுகளில் ஆழமான பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும், இந்த துயர சம்பவத்திற்கு அமெரிக்கா முழுவதும் உள்ள மக்கள் இந்திய மக்களுடன் இணைந்து துக்கம் அனுசரிக்கிறார்கள் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது
முன்னதாக, ஒடிசா ரயில் விபத்துக்கு உலக தலைவர்களான தைவான் அதிபர் சாய் இங்-வென், கனடா பிரதமர், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ரஷ்ய அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் என பலர் தங்களது இரங்கல் செய்தியை பகிர்ந்து கொண்டனர்.