ஒடிசா ரயில் விபத்து: சீர்குலைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்.!
ஒடிசா ரயில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நேற்றய நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளது. 747 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 56 பேர் படுகாயமடைந்து, கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ரயில் விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நேற்று காலை முதல் நடைபெற்று வருகின்றன. இது குறித்து ரயில்வே அமைச்சகத்தின் தகவளின்படி, பாதிக்கப்பட்ட தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
#WATCH | Odisha: Restoration work underway at the site where the horrific #BalasoreTrainAccident took place, killing 288 people and injuring 747 pic.twitter.com/Gxqyr2FKoh
— ANI (@ANI) June 4, 2023
7க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து நிவாரண ரயில்கள், 3-4 ரயில்வே மற்றும் 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
#WATCH | Odisha: Aerial visuals from ANI’s drone camera show the restoration work that is underway at the site where the deadly #BalasoreTrainAccident took place pic.twitter.com/bjMQIXxQO9
— ANI (@ANI) June 4, 2023