ஒடிஷா ரயில் விபத்து: மு.க.ஸ்டாலினின் அதிரடி உத்தரவு.!

TrainAccident -mkstalin

ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினருக்கு மு.க.ஸ்டாலினின் புதிய உத்தரவு.

ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நேற்றய நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே,  ஒடிசா ரயில் விபத்தை அடுத்து, தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு உதவுவதற்காக அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு இன்று காலை ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதாவது, ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை. தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

தற்போது வரை, அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது என தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில் கூறுகையில், ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாகச் சென்னை வந்தடைவதை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்