#BigBreaking:கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து 179 பேர் காயம்
கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்த ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தானது இரவு 7.20 மணியளவில் நடந்துள்ளது இதில் குறைந்தது 179 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்தை அடுத்து கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பல பெட்டிகள் தடம் புரண்டன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த செய்தியின் விரிவாக்கம் தொடரும்.