கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு!

கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர், உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. அமைச்சரின் சகோதரர் அசோக்குமார், கரூர் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்டோர் இடங்களில் சோதனை நிறைவு பெற்றுள்ளது.

நேற்று 7வது நாளாக கரூரில் அமைச்சர் செந்தி பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8-ஆவது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். 23 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், மேலும் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

மேலும், இந்த சோதனையின்போது 2 பெட்டி நிறைய உள்ள ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும், 3 இடங்களுக்கு சீல் வைத்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்