பேனர் விவகாரம்: தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் -கோவை ஆட்சியர் கிராந்திகுமார்.!!
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் நேற்று 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். பேனரை வைத்துக்கொண்டு இருக்கும் போது சூறாவளிக்காற்று வீசியதால், அனைவரும் இறங்கி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்குள் இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒப்பந்ததாரர்கள் பாலாஜி, பழனிசாமி, நில உரிமையாளர் ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு, இவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இந்த நிலையில், பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த இந்த விவகாரத்தில் தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார். மேலும். அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்ற காவல்துறை, உள்ளாட்சி அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கும் எனவும் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.