வாழ்நாள் முழுவதும் சிறை! வரலாற்று சிறப்பிமிக்க தீர்ப்பு – வழக்கறிஞர் பவானி பா.மோகன்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜுக்கு விதித்த வாழ்நாள் சிறை உறுதி.
கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்தது சென்னை உயர்நீதிமன்றம். கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யப்பட்டது.
மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை, குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து, தணடனை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். மேலும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்படும் சரிதான் என கூறி, இவ்வழக்கில் 5 பேர் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜ் தாயார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது.
இதில், குற்றம் சாட்டப்பட்ட A13 மற்றும் A14 ஆகிய இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மூத்த வழக்கறிஞர் பவானி பா.மோகன், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. உடற்கூராய்வு அறிக்கைதான் இது தற்கொலை அல்ல கொலை என தெளிவாக நிரூபித்துக் காட்டியுள்ளது.
கோகுல்ராஜ் தற்கொலை என யுவராஜ் உட்பட 10 பேர் கூறிய பொய்யான வாதம் முறியடிக்கப்பட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சாட்சிகள் பொய் சொன்னாலும் சாட்சியம் பொய் சொல்லாது என்றும் கோகுல் ராஜ் கொலை வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பவானி பா.மோகன் தெரிவித்துள்ளார்.