பள்ளிகள் திறப்பு – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

specialbuses

தமிழ்நாட்டில் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி, 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் ஜூன் 7-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதனால், அனைத்து பள்ளி வளாகங்களிலும் தூய்மை பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது.

கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம். இதுபோன்று, கல்லூரி மாணவர்களும் கடந்த ஆண்டின் பயண அட்டையை காண்பித்து பேருந்தில் பயணம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், சீருடை அணிந்திருந்து அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி, 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற முக்கிய இடங்களுக்கும், பெங்களூருக்கும் 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

எனவே, மொத்தம் 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை, திருச்சியில் இருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப  பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Geethajeevan
Yogi Babu
Southwest Bay of Bengal
M K Stalin
chicken pox (1)
orange alert tn