#BREAKING: ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழக்கியுள்ளது. 2010-ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.
அதன்படி, 2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தகுதி தேர்வு கட்டாயம் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நேரடி நியமன ஆசியர்களுக்கு மட்டும் தகுதி தேர்வை கட்டாயமாக்கிய தமிழ்நாடு அரசின் விதி ரத்து செய்யப்பட்டது. மேலும், பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.