திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்ட திருவிழாவில் புதுச்சேரி ஆளுநர்.. முதல்வர்… அமைச்சர்கள்…

Tamilisai Soundararajan

திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். 

புதுச்சேரியை மாநிலத்தில் வில்லியனூரில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் திருவிழாவானது கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. அதனை அடுத்து நேற்று பிரம்மாண்ட தேர் திருவிழா நடைபெற்றது.

இந்த தேர் திருவிழாவானது காலை 7:45க்கு தொடங்கியது. இதனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வடம் பிடித்து தேரை இழுத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கோவிலானது கடந்த 12ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இந்த கோவிலின் தேர் திருவிழாவானது அங்கு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஒட்டி வில்லியனூரில் பல்வேறு இடங்களில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நேற்று தேர் திருவிழாவை நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, இன்று தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து நாளை முத்து பல்லாக்கு உற்சவம் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்