#Justnow : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு..!
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே மேற்கொள்ளும் என அறிவிப்பு.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் 13 அப்பாவி மக்கள் பரிதாபமாக சுட்டு கொள்ளப்பட்டனர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில் வேதாந்த நிறுவனம் மீண்டும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் இதற்கு எதிராக மக்கள் தொடர்ந்து கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தற்போது, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் ஏற்க வேண்டும் என்றும், இதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.