ஓடும் ரயிலில் ஏற முயன்று, தவறி விழுந்த பெண்…அசத்தலாக காப்பாற்றிய பெண் கான்ஸ்டபிள்.!!
ஹைதராபாத் பேகம்பேட் ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணியின் உயிரை ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎஃப்) பெண் கான்ஸ்டபிள் காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தின் அந்த வீடியோவில், கான்ஸ்டபிள் குமாரி சனிதா என்பவர் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையிலான இடைவெளியில் ஒரு பெண் பயணி விழுவதைக் கண்டு விரைந்து செயல்படுவதைக் காணலாம். கான்ஸ்டபிளுக்கு மற்றொரு பயணி உதவுவதை வீடியோ காட்டுகிறது.
இறுதியாக பெண் பயணியை கான்ஸ்டபிள் காப்பாற்றினார். வீடியோவை பார்த்த பலரும், கான்ஸ்டபிள் சனிதாவை பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பான காட்சியின் சிசிடிவி காட்சிகளை ட்வீட் செய்த ரயில்வே பாதுகாப்பு படை. “ஒரு கேடயம் போல் செயல்பட்ட குமாரி சனிதாவுக்கு வாழ்த்துக்கள்” என்று ஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது.
Hats off to Kumari Sanita whose readiness worked like a shield and protected a lady passenger from imminent danger at Begumpet railway station.#JeevanRaksha #WeServeAndProtect pic.twitter.com/1LwqFZdl1s
— RPF INDIA (@RPF_INDIA) May 31, 2023