மிகவும் உயரமான குதிகால் செருப்பு அணிபவரா நீங்கள்..? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு..!

highheel

மிகவும் உயரமான குதிகால் செருப்பு அணிபவர்கள் பின்பற்ற வேண்டிய  வழிமுறைகள். 

பொதுவாகவே பெரும்பாலான இளம் பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதை தான் விரும்புவதுண்டு. ஆனால் இந்த ஹை ஹீல்ஸ் அணிவதால் அவர்கள் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. ஹைஹீல்ஸ் அணிவதற்கு முன்பதாக, அதை அணியக்கூடியவர்கள் முன்னும் பின்னும், சிலவற்றை கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

கொப்புளங்கள் ஏற்பட வாய்ப்பு

blisters
blisters [Imagesource : Representative]

அதிக உயரமான செருப்புகள் மற்றும் வலி மிகுந்த இறுக்கமான பிடிப்புடன் கூடிய காலணி அணிந்தால் காலில் கொப்புளங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பல மணி நேரங்கள் இந்த செருப்பை அணிந்திருக்கும் பெண்களுக்கு இந்த கொப்புளங்கள் உருவாகிறது. கொப்புளங்கள் என்பது நமது சருமத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது சங்கடமான ஒன்றை அணியும் போது ஏற்படும் காயம் ஆகும்.

ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் கொப்புளங்களை தவிர்க்க உங்கள் கால்கள் நன்கு சுத்தம் செய்து, முற்றிலும் மூடப்பட்ட காலனிகளை அணியாமல், காற்றோட்டமான காலணிகளை அணிவது நல்லது. ஹீல்ஸ் அல்லது ஷூக்களை அணிவதற்கு பதிலாக ஹீல்ஸ் பிளாட்டாக உள்ள செருப்புகளை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

உங்கள் கால்களை நனைக்க வேண்டும் 

water foot
water foot [Imagesource : India.com]

நாள் முழுவதும் ஹீல்ஸ் செருப்பு அணிந்திருப்பவர்கள் அசௌகரியமான சூழ்நிலையை உணர்ந்தால் கால்களை நீரில் ஊற வைக்கலாம். ஒரு தொட்டி அல்லது வாலியில் பாதியிலே தண்ணீரை நிரப்பி சிறு துளிகள் எண்ணெய், எப்சம் உப்பு சிறிதளவு சேர்த்து அதை சிறிது நேரம் தண்ணீரில் வைத்தால் கால்களுக்கு மசாஜ் செய்வது போன்ற ஒரு அனுபவம் இருக்கும். இது கால்களில் உள்ள எரிச்சல் போன்றவற்றை குறைக்க உதவும்.

மனஅழுத்தம் 

stress
stress [Imagesource : Representative]

குதிகால் செருப்பு அணிவது உண்மையிலேயே மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடும். இந்த செருப்பை தவிர்த்து வேறு செருப்பு அணிய மனமில்லாதவர்கள்கள், ஸ்பா அல்லது கால் மசாஜ் செய்வது நல்லது. அது உங்கள் கால்களில் உள்ள வலிகளைப் போக்கவும், கால்களை தளர்த்தி புத்துணர்ச்சி அளிக்கவும் உதவும். இதன்மூலம் வலிகளில் இருந்து விடுபடுவதுடன் மீண்டும் அந்த செருப்பை போட்டு செல்ல உதவியாக இருக்கும்.

நீண்ட நாள் பிரச்சனை 

flatchapael
flatchapael [Imagesource : Representative]

பெரும்பாலும் உயரமான ஹில்ஸ் அணிபவர்களுக்கு கால் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம்தான். எனவே நீண்ட நாள் கால் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இதுபோன்ற செருப்பை அணிவதை தவிர்த்து, வசதியான தட்டையான செருப்பு அணியலாம். இதனால் எலும்பு சம்பந்தமான பிரச்சினை கீழ்வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்