KPY தீனாவுக்கு திருமணம் முடிந்தது…குவியும் வாழ்த்துக்கள்..வைரலாகும் புகைப்படங்கள்.!!
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தற்போது சினிமாவில் பல டாப் நடிகர்களுடன் நடித்து கலக்கி வருபவர் தீனா. முன்னதாக இவர் தான் புதிதாக வீடு கட்டி விட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.
View this post on Instagram
இந்த நிலையில், தற்போது அதனை தொடர்ந்து தீனா தனது சொந்த கிராமத்தில் புதிய வீட்டைக் கட்டி முடித்த நிலையில், இன்று திருமணமும் செய்துகொண்டார். ஆம், இன்று காலை தீனா பிரகதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பிரகதி கிராபிக் டிசைனராகப் பணிபுரிந்து வருகிறார்.
View this post on Instagram
இவர்களுடைய திருமணம் இன்று காலை பட்டுக்கோட்டையில் பெற்றோர்களின் முன்னிலையில், நடந்திருக்கிறது. இவர்களுடைய திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில சினிமா பிரபலங்கள் பலரும் வருகை தந்துள்ளார்கள்.
திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட பபுகைப்படங்களை தீனா தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், வரும் ஜூன் 10-ம் தேதி சென்னையில் இருவருக்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.