சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்ட நிலையில் சென்னை திரும்பியுள்ளார்.
இந்த பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன் பின் அளித்த செய்தியாளர்கள் சந்திபில் ரூ.3000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஈர்க்க திட்டமிட்டதாகவும்.ஆனால் 3,233 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.மேலும் 2024 ஜனவரி மாதம் 10,11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த மாநாட்டை தமிழக அரசு சிறப்பாக நடத்த உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த செய்தியின் விரிவாக்கம் தொடரும்.