சென்னையை சேர்ந்த சுரானா நிறுவனத்தின் ரூ.124 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை
சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ரூ.124 கோடி மதிப்புள்ள சுரானா நிறுவன சொத்துக்கள் முடக்கம்.
சென்னையை சேர்ந்த சுரானா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் சுமார் ரூ.124 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ரூ.124 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதில், 78 அசையா சொத்துக்கள், 16 அசையும் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.3,986 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சுரானா நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டது. வங்கி கடன் மோசடி வழக்கில் சுரானா நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.248.98 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் பெற்ற ரூ.3,986 கோடி கோடியை சுரானா நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை என ஏற்கனவே சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இதுபோன்று வங்கி கடன் தொகையை சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக சுரானா நிறுவனம் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்திருந்தது.
ED has provisionally attached 78 immovable properties and 16 movable properties valued at Rs. 124 Crore (approx.) in the possession of various persons and entities linked to the Chennai based Surana Group of Companies under the provisions of PMLA, 2002
— ED (@dir_ed) May 31, 2023