ஆதாரம் இருந்தால் சமர்ப்பியுங்கள்! தூக்கில் தொங்கவும் தயார் – பிரிஜ் பூஷன் பேச்சு

Brij Bhushan Singh

என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தூக்கில் தொங்கவும் தயார் என WFI தலைவர் பேச்சு.

இந்திய மல்யுத்த வீராங்கனைகள், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்து, அவரை கைது செய்ய வேண்டும் என டெல்லியில் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த சமயத்தில், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் WFI தலைவரை பதவி நீக்கம் செய்து, கைது செய்யக் கோரி வரும் ஒலிம்பியன்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகட் ஆகியோர் தங்களது பதக்கங்களை கங்கையில் வீசுவதற்காக நேற்று ஹரித்வார் வந்த நிலையில், பதக்கங்களை வீச விடாமல் அவர்களை விவசாய சங்கங்கள் தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் பொது பேரணியில் ஒன்றில் உரையாற்றிய இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதனை நீதிமன்றத்தில் சமர்பிக்கட்டும். தண்டனை எதுவாக இருந்தாலும், அதனை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தூக்கில் தொங்கவும் தயார் என தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீரர்கள் தனக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக கங்கையில் பதக்கங்களை வீசுவதாக அறிவித்ததற்காக கேலி செய்தார். நான்கு மாதங்கள் ஆகிவிட்டன, அவர்கள் என்னை தூக்கிலிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அரசு என்னைத் தூக்கிலிடவில்லை, அதனால்தான் அவர்கள் நேற்று ஹரித்வாரில் கூடி தங்கள் பதக்கங்களை கங்கையில் வீச போவதாக மிரட்டினர்.

இது செயல் அவர்கள் விரும்பும் தண்டனையை எனக்கு கொண்டு வராது, இது அனைத்தும் உணர்ச்சிகரமான நாடகம். மல்யுத்த வீராங்கனைகள் புகார் குறித்து, டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருந்தால் நான் கைது செய்யப்படுவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களை அவர் தனது குழந்தைகளாகவே கருதுவதாகவே கூறினார். சில நாட்களுக்கு முன்பு, அவர்கள் என்னை ‘மல்யுத்தத்தின் கடவுள்’ என்று அழைத்தார்கள். மல்யுத்தத்தில் இந்தியாவின் நிலை குறைவாக இருந்தது, ஆனால், நான் பொறுப்பேற்ற பிறகு, அது மேம்பட்டு முதல் ஐந்து இடங்களுக்குச் சென்றது என்று அவர் மேலும் கூறினார்.

இதனிடையே, மல்யுத்த சம்மேளன தலைவர் மீது மல்யுத்த வீரர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பான இறுதி அறிக்கையை டெல்லி போலீசார் 15 நாட்களுக்குள் தாக்கல்  செய்யப்படும் என கூறப்படுகிறது. 15 நாட்களுக்குள் காவல்துறை தரப்பில் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். அது குற்றப்பத்திரிகையாகவோ அல்லது இறுதி அறிக்கையாகவோ இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்