சாம்சங் பிரியர்களே..! 108MP கேமரா, 6,000mAh பேட்டரியில் புதிய கேலக்ஸி சீரிஸ் அறிமுகம்…
ஸ்மார்ட் போன்களில் பலரும் விரும்பி உபயோகம் செய்யக்கூடிய போன் என்றால் சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy) என்று கூறலாம். தற்போது, சாம்சங் நிறுவனம் தனது எஃப் சீரிஸில் அடுத்த மாடலான கேலக்ஸி எஃப்54 5ஜி ஸ்மார்ட் ஃபோனை, இந்தியாவில் வெளியிட உள்ள தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
View this post on Instagram
ஜூன் 6 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது, இந்நிலையில் வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக, வரவிருக்கும் சாம்சங் 5G தொலைபேசியின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் இணையத்தில் கசிந்துள்ளது.
புதிய ‘Samsung Galaxy F54 5G’ போன் இந்தியாவில் ரூ.28,499 ஆரம்ப விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாம்சங் இரண்டு விலைகளில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்டோரேஜின் மாறுபாடு படி, விலையும் மாறுபடும். ஜூன் 6 ஆம் தேதி சாம்சங் தனது புதிய 5G ஃபோனை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் போது தான் விலைப் பற்றி தெளிவு வரும்.
கேலக்ஸி F54 போன் பற்றிய சில விவரங்கள்:
- வரவிருக்கும் Samsung Galaxy F54 ஃபோனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரி இடம்பெறும்.
- Samsung Galaxy F54 ஆனது நான்கு வருட ஆண்ட்ராய்டு OS மேம்படுத்தல்களைப் பெற தகுதியுடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
- 6.7 இன்ச் சூப்பர் FHD+AMOLED பிளஸ் டிஸ்ப்ளேவைப் பெறலாம், இது 120Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கும்.
- 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கும்.
- இது Octacore Exynos 1380 செயலியைப் பெறும்.
- பின் புற கேமராவில் முக்கிய லென்ஸ் 108MP ஆக இருக்கும். இது தவிர, அதில் 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும்.
- மேலும், முன்பக்கம் 32MP கொண்ட செல்ஃபி கேமராவை அந்நிறுவனம் வழங்குகிறது.
முன்பதிவு:
சாம்சங் கேலக்ஸி எஃப்54 5ஜி மாடலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. Flipkar மற்றும் Samsung அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பயனாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 999 ரூபாய் செலுத்தி பயனர்கள் செல்போனை முன்பதிவு செய்யலாம் எனவும், அவ்வாறு முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.2000 சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.