இவர்களின் இரத்தக்கண்ணீருக்கு ஒன்றிய அரசு பதில் கூறியே தீரவேண்டும் – துரை வைகோ

duraivaiko

மல்யுத்த வீராங்கணைகளாக, வீரர்களாக நாட்டிற்காக விளையாடி பெருமைசேர்த்து வருபவர்களின் இரத்தக்கண்ணீருக்கு ஒன்றிய அரசு பதில் கூறியே தீரவேண்டும் என துறை வைகோ ட்வீட். 

இந்திய மல்யுத்த வீராங்கனைகள், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்து அவரை கைது செய்ய வேண்டும் என பல நாட்களாக போராடி வருகின்றனர். புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, தங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை ஆற்றில் விட போவதாக அறிவித்து பின்னர் விவசாயிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அதனை கைவிட்டனர். இதுகுறித்து துறை வைகோ அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘மல்யுத்த வீரர்களின் நீதிக்கானப் போராட்டம் வெல்லட்டும்! ஏழ்மையும் வறுமையும் தாண்டவம் ஆடும் எளியகுடும்பத்தில் பிறந்த தங்கள் முயற்சி,ஊக்கத்தால் மல்யுத்த வீராங்கணைகளாக, வீரர்களாக நாட்டிற்காக விளையாடி பெருமைசேர்த்து வருபவர்களின் இரத்தக்கண்ணீருக்கு ஒன்றிய அரசு பதில் கூறியே தீரவேண்டும்.

ஐபிஎல் சிஎஸ்கே வெற்றியைக் கொண்டாடி மகிழும் சமூகம், நான்கு மாத காலத்திற்கும் மேலாக நீதிக்காகப் போராடி வரும் இந்திய மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்