அனைத்து அமைப்புகளும் பாஜக கட்டுப்பாட்டில்.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு!

Rahul Gandhi

கடவுளைவிட தமக்குத்தான் அதிகம் தெரியும் என்று சிலர் கருதி கொண்டிருக்கிறார்கள் என ராகுல் காந்தி விமர்சனம்.

அமெரிக்காவின் கலிபோனியா மாகாணத்தில் உள்ள சாந்தா கிளாரா நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அரசியல் பிரச்சாரத்திற்கு தேவையான அனைத்து அமைப்புகளையும் பாஜக, ஆர்எஸ்எஸ் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டன. குமாரி முதல் காஷ்மீர் வரை பயணம் மேற்கொண்டபோது இனி பொதுக்கூட்டம் போன்றவை உதவாது என்பதை தெரிந்துகொண்டேன். இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக அரசு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன, மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

இந்தியாவில் அரசியல் ரீதியாக செயல்படுவது கடினமாகி வருகிறது. அரசின் நெருக்கடி காரணமாகவே நாட்டின் தென்முனையான குமரியில் இருந்து வடக்கின் ஸ்ரீநகர் வரை நடைப்பயணம் மேற்கொண்டேன். நடைப்பயணத்தை சாதாரணமாக மேற்கொள்ளலாம் என முதலில் நினைத்தேன். நான்கு, ஐந்து நாள் பயணத்துக்கு பின் 4,000 கிமீ தொலைவுக்கு நடைபயணம் மேற்கொள்வது எளிதானதல்ல என்பது புரிந்தது. ஏற்கனவே, முழங்காலில் ஏற்பட்டிருந்த காயம், வலி தர ஆரம்பித்ததால் திகைத்து போனேன். நடைப்பயணத்தை தொடங்கிவிட்டதால், வேறு வழி இல்லை, நடந்து தான் ஆக வேண்டும் என முடிவு செய்தேன்.

ஒரு நாளுக்கு 25 கிமீ வீதம் 3 வாரங்கள் நடைபயணம் மேற்கொண்ட பிறகு வலி இருந்தாலும், களைப்பு தெரியவில்லை. நடந்து செல்வது ராகுல் அல்ல, எங்களோட இந்தியாவே நடந்து வருகிறது என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது. பல்வேறு மதங்கள், சமுதாயங்களை சேர்ந்த இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் நடைப்பயணத்தில் பங்கேற்றனர். நடைப்பயணத்தில் பங்கேற்றவர்களின் அன்பு மற்றும் பாசத்தால் யாருக்குமே களைப்பு தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அனைவரையும் நேசிக்கக்கூடிய கட்சி, அனைவரது கருத்துக்களையும் கேட்க கூடிய கட்சி. நடைப்பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. உலகில் யாரும் எல்லாம் தெரிந்தவர் என்று கூறிக்கொள்ள கூடிய நிலை இன்று இல்லை. ஆனால், இந்தியாவில் சிலர் தமக்குத்தான் அனைத்தும் தெரியும் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். கடவுளைவிட தமக்குத்தான் அதிகம் தெரியும் என்று சிலர் கருதுகிறார்கள்.

என்ன நடக்கிறது என்பதை கடவுளுக்கே எடுத்து கூற கூடிய ஒருவர் இந்திய பிரதமர். கடவுளுக்கு அருகில் பிரதமர் மோடியை அமர செய்திர்கள் என்றால், பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என அவருக்கே விளக்கி விடுவார். இந்தியாவில் இருக்கும் சிலர் விஞ்ஞானிகளுக்கு அறிவியலை விளக்குபவர், வரலாற்று அறிஞர்களுக்கு சரித்திரத்தை போதிப்பர் என விமர்சித்துள்ளார்.

மேலும், வாழ்க்கையில் எதையும் கேட்க விரும்பவில்லை என்றால், ஒருவரால் எதையும் புரிந்து கொள்ள முடியாது. எதையும் புரிந்து கொள்ளாமல் எல்லாவற்றையும் பேசக்கூடிய சிலர் இந்தியாவில் இருக்கிறார்கள். மக்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதை நடைப்பயணத்தின் போது உணர்ந்துகொண்டேன் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Hockey Asia Cup
Trump - Zelensky
Dhanush - Nayanthara
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush