இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.! 12ஆம் வகுப்பு தகுதி போதும்.!

navy agineveer recriutment

இந்திய கடற்படையில் அக்னிவீரர் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம், கடற்படை, விமான படைகளுக்கு 4 வருடம் குறுகிய கால ஒப்பந்தமாக ‘அக்னி வீரர்’ எனும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியாகி கொண்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் முப்படைகளின் சேரும் இளைஞர்களுக்கு 4 வருடங்கள் குறிப்பிட்ட பணிகள் கொடுக்கப்படும். அதன் பிறகு தேவைப்பட்டால் நிரந்தர பணி வழங்கப்படும்.

இந்த 4 வருட கால பணியாற்றியதை கொண்டு முப்படைகளில் சேர விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது இந்த திட்டத்தின் கீழ் கடற்படையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த (மே) 29ஆம் தேதி வெளியாகியுள்ளது.

பதவி – கடற்படை அக்னிவீரர்.

காலியிடங்கள் – மொத்தமாக இந்தியா முழுக்க 1365 காலிப்பணியிடங்கள்.

கல்வித்தகுதி –  குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்): 

  • முதல் வருடம் – Rs. 30,000/.
  • இரண்டாம் வருடம்- Rs. 33,000/-
  • மூன்றாம் வருடம் – Rs. 36,500/-
  • நான்காம் வருடம் – Rs. 40,000/-

வயது வரம்பு – 17 வயதிலிருந்து 23 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பணியிடம்  – இந்தியா முழுக்க பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு.
  • உடற்தகுதி தேர்வு.
  • சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பக் கட்டணம் – 550/- (குறிப்பிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டண சலுகை உண்டு)

விண்ணப்பம் தொடங்கிய தேதி – 29 மே  2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 15 ஜூன் 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  • இந்திய கடற்படை தளமான joinindiannavy.gov.in -க்கு சென்று Join as Agniveer எனும் லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதனை தொடர்ந்து, Recruitment நோட்டீசை கிளிக் செய்ய வேண்டும். அதில் மேற்கண்ட பல்வேறு பணிகளுக்கான தரவுகள் இருக்கும் அதில் தேவையான குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் பெயர் , முகவரி உள்ளிட்ட அத்தியாவச தகவல்களை குறிப்பிட்டு அதற்கான உறுதியான ஆதாரங்களையும் பதிவேற்ற வேண்டும்.
  • இறுதியாக தேவை இருப்பின் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இறுதி நகலை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பயனர்களின் இணையதள முகவரி மூலம் அழைக்கப்படுவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்