200 MP கேமராவுடன் களமிறங்கும் “Realme 11 Pro” சீரிஸ்…எப்போது அறிமுகம் தெரியுமா..?
200 மெகாபிக்சல் கேமராவுடன் கூடிய Realme 11 Pro தொடர் இந்தியாவில் ஜூன் 8 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்மார்ட் போன்களில் பலரும் விரும்பி உபயோகம் செய்யக்கூடிய போன் என்றால் ரியல்மி (Realme ) என்று கூறலாம். ரியல்மி அடிக்கடி பல நல்ல அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது Realme 11 Pro சீரிஸை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 8-ம் தேதி இந்தியாவில் ரியல்மி 11 ப்ரோ (Realme 11 Pro) மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 11 Pro+5G) என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யவுள்ளது.
ரியல்மி 11 ப்ரோ + 5G டிஸ்ப்ளே (Display):
ரியல்மி 11 ப்ரோ ப்ளஸ் 5ஜி டிஸ்ப்ளே ஸ்மார்ட் போனானது 6.7 இன்ச் FHD+ (முழு தெளிவு திறன்) கொண்ட வளைந்த AMOLED (அமோல்ட்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) வழங்குகிறது. இதன் மூலமே இது பலருக்கும் பிடித்த நல்ல போனாக இருக்கும் என தெரிகிறது.
ரியல்மி 11 ப்ரோ டிஸ்ப்ளே (Display):
ரியல்மி 11 ப்ரோ ஸ்மார்ட் போனானது 6.4 இன்ச் FHD+ (முழு தெளிவு திறன்) கொண்ட AMOLED (அமோல்ட்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 90Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) வழங்குகிறது. மேலும் இதில், 1,000 நெட்ஸ் ஒளித்திறனை கொண்டுள்ளது.
கேமரா
ரியல்மி 11 ப்ரோ
- ரியல்மி 11 ப்ரோ ஆனது 64MP பிரைமரி கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா உள்ளிட்ட இரண்டு பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இது புகைப்படம் எடுப்பவர்களுக்கு செம போனாக அமையும். அதைபோல் பின்புற கேமரா 8MP செல்பி கேமரா கொண்டுள்ளது.
ரியல்மி 11 ப்ரோ + 5G
- இந்த ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போனில் 200MP ரியர் கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் + 2MP மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் 32MP செல்பி கேமரா ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போனில் இருக்கிறது.
உள்நினைவகம் ( InteralMemory)
- ரியல்மி 11 ப்ரோ 8ஜி பிரேம் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது.
- மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜிபோன் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது.
பேட்டரி வசதி
- ரியல்மி 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.
- ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5 ஜி 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது.
விலை எவ்வளவு..?
ரியல்மி 11 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.18,980 விலையுடனும், ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5 ஜி ரூ. 24,890 விலையுடனும் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில், இந்த இரண்டு போன்களுமே நல்ல அம்சங்களை கொண்ட தரமான போனாக தான் இருக்கிறது. எனவே, ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிக்கொள்ளலாம்.
எப்போது அறிமுகம்..?
மேலும், ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ஜூன் 8 ஆம் தேதி வெளியிடப்போவதாக ரியல் மி உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போன்களின் அறிமுக நிகழ்வு மதியம் 12 மணிக்கு தொடங்கி, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
????Attention #realmeFans????
Presenting the perfect blend of luxury and next-level design! Experience the power of #realme11ProSeries5G with @iamsrk on 8th June, 12 noon.
Are you ready for #TheNextLeap? #200MPzoomToTheNextLevel
Know more: https://t.co/YhMCBKPGSZ pic.twitter.com/fOahGt7itK
— realme (@realmeIndia) May 31, 2023