போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் :பா.ஜ.க..!
பா.ஜ.க. எம்.பி. டி.பி.வத்ஸ், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கல்வீச்சில் ஈடுபடுபவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் காஷ்மீர் மாநிலத்துக்குச் சென்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல் முறை கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்தார்.
10 ஆயிரம் இளைஞர்களின் மீதான வழக்குகள் அவர்களின் எதிர்காலம் கருதி திரும்பப் பெறப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் கல்வீச்சில் ஈடுபடுபவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு பதில் அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என முன்னாள் ராணுவ அதிகாரியும் பா.ஜ.க. மாநிலஙகளவை உறுப்பினருமான டி.பி.வத்ஸ் ((DP.Vats)) தெரிவித்துள்ளார்.