தளபதி விஜய் ஸ்டைலை பின்பற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி..!
நடிகர் ரஜினி 1992ம் ஆண்டு அதாவது அந்த ஒரே வருடத்தில் இரண்டு தமிழ் படங்களில் நடித்தார். மன்னன் மற்றும் அண்ணாமலை ஆகியவை தான் அந்த படங்கள். இதில் அண்ணாமலை பெரு வெற்றி பெற்றது. அண்ணாமலை வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். வருடத்திற்கு ஒரு படம் என்பதில் உறுதியாக இருந்தார்.
மேலும் தான் நடித்த படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் இமயமலை சென்றுவிடுவது ரஜினியின் வழக்கமாக இருந்தது. படம் 100 நாட்கள் ஓடிய பிறகு மீண்டும் அடுத்த படத்திற்கு கதை கேட்டு சூட்டிங்கிற்கு செல்வது ரஜினியின் வழக்கம்.
இதனால் ரஜினியின் திரைப்படங்கள் வருடத்திற்கு ஒன்று என்று இருந்து பின்னர் 2 வருடங்களுக்கு ஒன்று, 3 வருடங்களுக்கு ஒன்று என்று ரீலிஸ் ஆகி வந்தன.
காலா திரைப்படம் வரை ரஜினி இந்த ஸ்டைலிலேயே தனது அடுத்த படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் காலா படம் ரீலிஸ் ஆன நாளன்று நடிகர் ரஜினி தனது அடுத்த படத்திற்கான சூட்டிங்கை தொடங்கியுள்ளார்.
கடந்த 26 வருடங்களில் ஒரு முறை கூட ரஜினி இப்படி தனது படம் ரீலிஸ் ஆகும் நாளில் சூட்டிங்கிற்கு சென்றது இல்லை. ஆனால் நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம் போன்றோர் தங்கள் படம் ரீலிஸ் ஆகும் நாட்களில் தங்களின் அடுத்த படங்களுக்கான பூஜை போடும் வழக்கம் கொண்டவர்கள்.
இப்படியாக விஜய் உள்ளிட்டோரை பின்பற்றி ரஜினி தற்போது நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வரை இப்படி தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டே இருப்பார் என்கிறது ரஜினிக்கு நெருக்கமான வட்டாரம். இதன் மூலம் தமிழ் திரையுலகின் பிக் பாசாக (The Big Boss) இருக்கும் ரஜினி புதிய திட்டத்துடன் களம் இறங்கியுள்ளது தெளிவாகிறது.