மருத்துவத்துறையில் விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மருத்துவத்துறையில் புதிதாக 4,200 பணியிடங்களை நிரப்புவதற்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை எல்லக்கிராப் மலை கிராமத்தில் மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் ஹீமோகுளோபினோ நோய் கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் ரூ.40 கோடி மதிப்பீட்டில் உயிர் காக்கும் உயர் ரக மருந்துகள் வழங்கும் திட்டத்தை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறையில் 1,021 மருத்துவர் பணியிடங்கள், 980 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்றும் இத்துறையில் புதிதாக 4,200 பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளது எனவும் தெரிவித்தார்.