ஹாட்ஸ்டாரை ஓரம் கட்டிய ஜியோ சினிமா…’ஐபிஎல்’ பைனலில் படைத்த புதிய சாதனை.!!

jiocinema new record IN IPL 2023

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியின் போது ஒரே நேரத்தில் 3.2 கோடி பார்வையாளர்களுடன் ஜியோசினிமா ஹாட்ஸ்டார் சாதனையை முறியடித்துள்ளது.

ஜியோ சினிமா 

JioCinema
JioCinema [Image source: file image ]

அம்பானியின் ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ சினிமா தற்போது மிகவும் பிரபலமான  ஓடிடி தளமாக மாறிவிட்டது என்றே கூறலாம். இதற்கு காரணமே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தான் என்று கூறலாம். ஏனென்றால்,  நடப்பாண்டு ஐபிஎல் தொடரை ஜியோ சினிமா அனைவரும் பார்க்கும்படி இலவசமாகவே ஒளிபரப்பு செய்தது. இதன் மூலம் ஜியோ சினிமா 10 மில்லியன் கூடுதல் சந்தாதாரர்களைப் பெற்றனர்.

சாதனை படைத்த ஜியோ சினிமா

ஐபிஎல் 2023 போட்டியில் ஜியோசினிமா பார்வையாளர்கள் எண்ணிக்கையில்  தொடர்ந்து சாதனைகளை முறியடித்து வருகிறது. அந்த வகையில், மே 29, (நேற்று ) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப்போட்டியில் புதிய சாதனை படைத்தது.

JioCinema
JioCinema [Image source : twitter/@TN_SamanthaFans]

இறுதிப்போட்டியில், குஜராத் அணியின் பேட்டிங் செய்யும்போது 18-வது ஓவர்களில்  ஒரே நேரத்தில் 3.2 கோடி பார்வையாளர்கள் ஜியோ சினிமாவில் ஐபிஎல்லை  கண்டு ரசித்தார்கள். இதன் மூலம் ஜியோசினிமா இதற்கு முன்பு ஹாட்ஸ்டார் படைத்த  சாதனையை முறியடித்தது. இதற்கு முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2.53 கோடி பார்வையாளர்களை பெற்று  சாதனை படைத்திருந்தது.அந்த சாதனையை ஜியோ சினிமா முறியடித்தது.

ஹாட்ஸ்டாரை மிஞ்சும் ஜியோ சினிமா 

கடந்த ஆண்டு  ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை வாங்கி வைத்திருந்த நிலையில், மாதம் 149 ரூபாய் செலுத்தினால் ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் வசதி இருந்தது. எனவே, பலரும் மாதம் சந்தா செலுத்தி ஐபிஎல்லை கண்டு கழித்தனர். இதனை தொடர்ந்து ஜியோ சினிமா, இந்த ஆண்டு ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்று அதனை இலவசமாகவே ஒளிபரப்பு செய்தது.

jiocinema vs hotstar
jiocinema vs hotstar [Image source: file image ]

இதன் மூலம் ஜியோ சினிமா கூடுதலாக 10 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றனர். மேலும், ஐபிஎல் இலவசமாக பார்க்கும் வசதியை ஜியோ சினிமா கொண்டு வந்த நிலையில், ஹாட்ஸ்டார் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழந்தனர். அவர்கள் ஜியோ சினிமாவின் சப்ஸ்கிரைப்ராக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் ஜியோ சினிமாவின் மவுசு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு இன்னும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்