OLA புதிதாக அறிமுகப்படுத்தும் ப்ரைம் பிளஸ் சேவை… பயன்கள் என்ன?
ஓலா நிறுவனம் அதன் பயனர்களுக்கு புதிதாக ப்ரைம் பிளஸ் எனும் ப்ரீமியம் சேவையை அறிமுகப்படுத்துகிறது.
பெரும்பாலான நகரங்களில் அதிகமாக இயங்கிவரும் ஆன்லைன் டாக்ஸி செயலி சேவைகளில் ஓலா(OLA) நிறுவன சேவையும் ஒன்று. எந்த நேரத்திலும் பயணிகளுக்கு பிக்அப்/ட்ராப் சேவைகளை வழங்கி வருகிறது. பயனர்கள் தங்களது மொபைலில் ஓலா செயலி மூலம் ஏற்றுமிடம் மற்றும் இறக்குமிடத்தை உள்ளிட்டு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் பெரும்பாலான வெளியூர்களில் வேலை செய்து வரும் பணியாளர்களுக்கு தக்க சமயத்தில் அலுவலகம் செல்வதற்கும், வெளியூர்/வெளி மாநிலங்களில் மக்களுக்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதற்கும் இது போன்ற ஆன்லைன் டாக்ஸி (OLA) செயலிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. ஆனால் சில சமயங்களில் அதாவது கனமழை, ட்ராஃபிக் போன்ற சமயங்களில் பயனர்களின் பயணத்தை(Raid) வண்டி ஓட்டுனர்கள் ரத்துசெய்வதும் உண்டு.
இது நம்மில் பலரும் அனுபவித்த/ அனுபவிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது OLA இந்த சிக்கலை தீர்க்க, ஓலா பிரைம் பிளஸ் என்ற புதிய பிரீமியம் சேவையை சோதித்து வருகிறது, இந்த ஓலா பிரைம் பிளஸ் பிரீமியம் திட்டத்தின் கீழ் பயனர்கள், பயணத்தை புக் செய்யும் போது, சிறந்த ஓட்டுனர்கள், ரத்து செய்யமுடியாத பயணம், தொந்தரவு இல்லாத பயணம் ஆகிய பலன்களை பெற முடியும்.
இருப்பினும், ப்ரைம் பிளஸ் சேவை தற்போது பெங்களூரில் உள்ள சில பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. பயனர்களின் ஆதரவை பொறுத்து நிறுவனம் இந்த ப்ரைம் பிளஸ் ப்ரீமியம் சேவையை அனைத்து பயனர்களும் அனுபவிக்கும் வகையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
ஓலாவின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால், ட்விட்டரில் நிறுவனத்தின் புதிய சோதனை முயற்சியை வெளிப்படுத்தினார். அவர் தனது ட்வீட்டில், ஓலா கேப்ஸ் தனது புதிய ப்ரைம் பிளஸ் சேவையின் சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்த ப்ரைம் பிளஸ் சேவையின் கீழ் சிறந்த ஓட்டுனர்கள், டாப் கார்கள், ரத்து செய்யமுடியாத மற்றும் செயல்பாட்டுத் தொந்தரவு இல்லாத பயணத்தை பெறலாம்.
ஓலா செயலி மூலம் பயண முன்பதிவு செய்யும் போது பிரைம் பிளஸைத் தேர்ந்தெடுக்கும் புதிய விருப்பத்தைக் காண்பிக்கும், பயணத்தின் ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் பகிர்ந்துள்ளார். ஸ்கிரீன்ஷாட்டின்படி பிரைம் பிளஸ் மூலம் பயணத்திற்கு வண்டியை முன்பதிவு செய்வதற்கு ரூ. 455 ஆகிறது.
Testing out a new premium service by @Olacabs!
Prime Plus: Best drivers, top cars, no cancellations or operational hassles. Will go live for select customers in Bangalore today. Do try it out ????????????
I’ll be using it frequently and will share my experiences here on Twitter. pic.twitter.com/c8YDDgnbPU
— Bhavish Aggarwal (@bhash) May 28, 2023
பொதுவாக ஓலா கேப்ஸின் மலிவான பயணமாக கருதப்படும் மினி(Mini) வண்டியை முன்பதிவு செய்வதற்கு ரூ. 535 என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓலா அறிமுகப்படுத்தும் புதிய ப்ரைம் பிளஸ் சேவையின் மூலம் பயணத்திற்கான விலை வேறுபடுகிறது என்பதால் இந்த திட்டத்திற்கு பயனர்கள் இடையே எதிர்பார்ப்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது.