உத்தரப்பிரதேசத்தில் பயங்கர விபத்து!பேருந்து மோதி 6 கல்லூரி மாணவர்கள், 1 பேராசிரியர் உயிரிழப்பு!ஆபத்தான நிலையில் 2 மாணவர்கள்
சாலையோரம் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் மீது உத்தரப்பிரதேச மாநிலம் கன்னூஜ் பகுதியில் பேருந்து மோதியதில், பேராசிரியர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சாண்ட் கபிர் நகர் ((Sant kabir Nagar)) மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்களும், பேராசிரியர்கள் சிலரும் ஹரித்வாருக்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர். கன்னூஜ் பகுதியில், ஆக்ரா-லக்னோ அதிவிரைவுச் சாலையில் சென்றபோது, பேருந்தை நிறுத்திவிட்டு, சாலையோரம் நின்றதாக கூறப்படுகிறது. அப்போது, அவ்வழியாக அதிவேகத்தில் வந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மாணவர்கள் மற்றும் ஒரு பேராசிரியர் மீது மோதியது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, காயமடைந்த 2 மாணவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.