மத்திய சுகாதார துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்.! பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும்.!

Jobs alert

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மத்திய சுகாதார துறையின் கீழ் செயல்படும் தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். கடந்த மே25, 2023 இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் 13, 2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியான தேதி : மே 25, 2023.

பதவியிடங்கள். – அலுவலக பணிகள்

கல்வித்தகுதி –  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். (பணிக்கேற்ப பட்டங்கள் மற்றும் அனுபவங்கள் வரவேற்கப்படுகின்றன)

சம்பளம் விவரம் – மாதம் 60,000 ருபாய் முதல் அதிகபட்சமாக 1,20,000 ருபாய் வரையில் ஊதியம் அளிக்கப்படும்.

வயது வரம்பு – குறிப்பிட்ட அனுபவத்துடன் 40வயது வரை உள்ளவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை – நேர்காணல் மட்டுமே.

விண்ணப்பக் கட்டணம் – இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 05 ஜூலை 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  • மத்திய சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வத் தளமான nhsrcindia.org -க்கு சென்று வேலைவாய்ப்பு பகுதி லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதனை தொடர்ந்து, Recruitment நோட்டீசை கிளிக் செய்ய வேண்டும். அதில் மேற்கண்ட பல்வேறு பணிகளுக்கான தரவுகள் இருக்கும். அதில் தேவையான குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் பெயர் , முகவரி உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்களை குறிப்பிட்டு அதற்கான உறுதியான ஆதாரங்களையும் பதிவேற்ற வேண்டும்.
  • இறுதியாக தேவை இருப்பின் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இறுதி நகலை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பயனர்களின் இணையதள முகவரி மூலம் அழைக்கப்படுவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்