பதக்கங்களை கங்கையில் வீசுவவோம்.! மல்யுத்த வீரர் பரபரப்பு அறிக்கை.!
இந்தியாவுக்காக பதக்கங்களை கங்கையில் விட போகிறோம் என இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து அவரை கைது செய்ய வேண்டும் என இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி – ஜந்தர் மந்தர் பகுதியில் 35 நாட்களுக்கு மேலாக போராடி வந்தனர்.
கடந்த ஞாயிற்று கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை தடுத்து காவல்துறையினர் தடுத்து கைது செய்து மாலையில் விடுவித்தனர். அதற்குள் ஜந்தர்-மந்தர் பகுதியில் போராட்டக்காரர்கள் அமைத்து இருந்த குடில்களை காவல்துறையினர் அகற்றினர்.
மேலும், மீண்டும் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட அனுமதிக்க மறுத்தனர். இதனால் அப்பகுதியில் மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது டிவிட்டர் பக்கத்தில், நீண்ட அறிக்கையை பகிர்ந்துள்ளார். அதில், நீதிக்காக போராடியதை தவிர வீராங்கனைகள் வேறு எதையும் அவர்கள் செய்யவில்லை.பிறகு ஏன் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்கள். மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். நங்கள் போராடும் இடத்திற்கு அருகில் தான் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி இருக்கிறார்கள். ஆனால் எங்கள் குற்றசாட்டுகளை பற்றி கேட்கவோ பேசவோ மறுக்கின்றனர்.
நாங்கள் போராடி விளையாடி வாங்கிய எங்கள் பதக்கங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அவை வெறும் பக்கங்களாக மட்டுமே இருக்கின்றனர். ஆதலால், புனிதமான அந்த பதக்கங்களை, புனிதமான கங்கை நீரில் விட்டு விடுகிறோம். இதனை கடுமையான மனநிலையில் இந்த முடிவை எடுத்துள்ளோம் என பஜிரங் புனியா தனது ட்வீட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கையை பகிர்ந்துள்ளார்.
???? pic.twitter.com/4LzKaVTYo4
— Bajrang Punia ???????? (@BajrangPunia) May 30, 2023