தீபிகாவை ஓரங்கட்டிய பிரியங்கா சோப்ரா !எதில் தெரியுமா?
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, இன்ஸடாகிராமில் அதிகம் பேர் பின் தொடரும் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பிரபலங்கள் அதிகளவில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக நடிகைகள் தொடர்ந்து இதில் பல தகவல்களையும் புகைப்படங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பாலிவுட் நடகைகள் தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ராவுக்கு இடையே இன்ஸ்டாகிராமில் கடும்போட்டி நிலவி வந்தது.
அவர்கள் இருவரையுமே ஒரே அளவிலான மக்கள் பின் தொடர்ந்தனர். தற்போது இந்த போட்டியில் பிரியங்கா சோப்ரா முன்னேறி தீபிகாவை பின்னுக்கு தள்ளியுள்ளார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிகமானனோர் பின் தொடரும் நடிகை என்ற பெருமையை பிரியங்கா சோப்ரா பெற்றுள்ளார். அவர் இந்திய திரையுலகையும் தாண்டி ஹாலிவுட்டிலும் களமிறங்கி உள்ளார் என்பதால் அவருக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.