பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 62,828 புள்ளிகளாக வர்த்தகம்..!

sensex

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 17.48 புள்ளிகள் சரிந்து 62,828 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,600 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் 2வது நாளான இன்றும் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 62,839 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 17.48 புள்ளிகள் அல்லது 0.028% என சரிந்து 62,828 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 2.30 புள்ளிகள் அல்லது 0.012% உயர்ந்து 18,600 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 62,846 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,598 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.

அல்ட்ராடெக் சிமெண்ட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ லிமிடெட், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி சுசுகி இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. டெக் மஹிந்திரா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review