சென்னை அணி சாம்பியன்… மகிழ்ச்சியில் ஜடேஜாவை கட்டித்தூக்கும் தோனி.!

IPL Winning

நேற்றைய ஐபிஎல் பைனலில் சென்னை அணியை வெற்றி பெற வைத்த ஜடேஜாவை தோனி நெகிழ்ச்சியில் கட்டித் தூக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

CSKChamp
CSKChamp [Image-Twitter/@IPL]

ஐபிஎல் 2023 தொடர் இறுதிப்போட்டியில் நேற்று சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை வென்றது. முதலில் பேட் செய்த் குஜராத் அணி 20 ஒவர்களில் சாய் சுதர்சன்(96 ரன்கள்) மற்றும் சஹா(54 ரன்கள்) அதிரடியால் 214 ரன்கள் குவித்தது. இதன்பின் சென்னை அணி களமிறங்கியதும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டக்வர்த் லூயிஸ் விதிப்படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Rutu-Conway
Rutu-Conway [Image- Twitter/@IPL]

ருதுராஜ் மற்றும் கான்வே அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கினர். அணியில் ஒவ்வொரு வீரரும் பொறுப்பை உணர்ந்து பவுண்டரிகள் மட்டும் அடிக்காமல் 1 மற்றும் 2 ரன்கள் அடித்து ஸ்ட்ரைக்கை மற்ற வீரருக்கும் கொடுத்து சிறப்பாக விளையாடினர். கடைசி வரை அதிரடியாக விளையாடிய சென்னை அணிக்கு இறுதியில் சில விக்கெட்களை இழந்து தடுமாற, அம்பத்தி ராயுடு முக்கியமான நேரத்தில் சில சிக்ஸர்களை அடித்து அணியை வெற்றியின் விளிம்பில் அழைத்து சென்றார்.

இறுதியில் ஜடேஜா தன் பங்கிற்கு அதிரடியைக் காட்ட, கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்படும் பொழுது சிக்ஸர் மற்றும் ஃபோர் அடித்து சென்னையை வெற்றி பெறச்செய்தார். வெற்றிக்கான ரன்களை அடித்து விட்டு ஜடேஜா, தோனியை நோக்கி ஓட, தோனி ஆனந்த கண்ணீரில் நனைந்த படியே ஜடேஜாவை கட்டித் தூக்கிவிடுவார், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மும்பையின் சாதனையை சமன் செய்து 5-வது சாம்பியன் பட்டம் வென்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்