கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம்-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இன்று கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
இன்று மாலை 5 மணிக்கு கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. இந்த டிரைலரை தமிழில் சுருதி ஹாசனும், இந்தியில் அமீர் கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிடுகின்றனர். டிரைலருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.