அடேங்கப்பா…சமந்தா அணிந்து வந்த செருப்பின் விலை இவ்வளவா..? வெளியான சீக்ரெட் தகவல்.!!
நடிகை சமந்தா சினிமாத்துறையில் மிகவும் ஸ்டைலான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில், நடிகை சமந்தா அடிக்கடி வெளியே சென்றால் அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி விடும்.
அந்த வகையில், தற்போது நடிகை சமந்தா தனது சுற்றுப்பயணங்களுக்காக பாராட்டப்பட்டார். சுற்றுலா செல்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு மிகவும் ஸ்டைலான உடையில் நடிகை சமந்தா வந்திருந்தார். அதற்கான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நடிகை சமந்தா மிகவும் ஸ்டைலான செருப்பு ஒன்றை அணிந்திருந்தார். தற்போது அந்த செருப்பின் விலை தான் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால், சமந்தா அணிந்து வந்த அந்த செருப்பின் விலை கிட்டத்தட்ட 2 லட்சம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர் அணிந்துள்ள செருப்பு “லூயிஸ் உய்ட்டன் பூல் ஸ்லைடுகள் ” ( Louis Vuitton pool slides) இந்த வகை செருப்புகள் விலை அதிகம். இந்த செருப்பை தான் நடிகை சமந்தா அணிந்துகொண்டு விமானநிலையத்திற்கு வந்துள்ளார். இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் அடேங்கப்பா சமந்தா அணிந்து வந்த செருப்பின் விலை இவ்வளவா..? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.