மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்பி பாலுபாவ் தனோர்கர் காலமானார்!
மகாராஷ்டிரா சந்திரப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்பி பாலுபாவ் தனோர்கர் காலமானார்.
மகாராஷ்டிராவிலிருந்து காங்கிரஸின் ஒரே மக்களவை எம்பியான பாலுபாவ் தனோர்கர் உடல்நல குறைவால் தனது 48 வயதில் இன்று அதிகாலை காலமானார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாலுபாவ் தனோர்கர் உயிரிழந்தார். சிறுநீரகக் கற்களுக்கான சிகிச்சைக்காக அவர் கடந்த வாரம் நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், அவர் டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்று காங்கிரஸின் பாலாசாகேப் தோரட் கூறினார். பாலுபாவ் தனோர்கர், பாலாசாகேப் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய தனோகர், 2014 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் காங்கிரஸில் இணைந்ததை அடுத்து, கடந்த 2019-இல் சந்திராபூர் தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.