கடைசி நிமடங்களில் BP மாத்திரை போட வைத்த போட்டி..! சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஜெயக்குமார்…!
ஐந்தாவது முறையாக கோப்பையையும் மக்கள் மனங்களையும் வென்றெடுத்து விட்டார் தோனி என ஜெயக்குமார் ட்வீட்.
நேற்றைய போட்டியில் கடந்த முறை கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை அணி இறுதிப்போட்டியில் களம் இறங்கியது. மழை குறிக்கீடு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் 15 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 214 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இறுதிவரை போராடி கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியை என அதிரடியாக விளையாடிய நிலையில், ஐந்தாவது முறை சென்னை அணி கோப்பையை வென்றது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எப்போதும் போல எல்லோரையும் கடைசி நிமடங்களில் BP மாத்திரை போட வைத்த போட்டி.. வியூகங்கள் எதிரணியை மட்டுமல்ல ரசிகர்களையும் வியப்படைய செய்கிறது. ஐந்தாவது முறையாக கோப்பையையும் மக்கள் மனங்களையும் வென்றெடுத்து விட்டார் தோனி! தோனி ஒரு சகாப்தம்! வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
எப்போதும் போல எல்லோரையும் கடைசி நிமடங்களில் BP மாத்திரை போட வைத்த போட்டி..
வியூகங்கள் எதிரணியை மட்டுமல்ல ரசிகர்களையும் வியப்படைய செய்கிறது.
ஐந்தாவது முறையாக கோப்பையையும் மக்கள் மனங்களையும் வென்றெடுத்து விட்டார் தோனி!
தோனி ஒரு சகாப்தம்!
வாழ்த்துக்கள் @ChennaiIPL #MSDhoni #CSK pic.twitter.com/t5X3B20vCc— DJayakumar (@offiofDJ) May 30, 2023