ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?
ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு 50-50 % இருப்பதாக வானிலை அறிக்கை தகவல்.
ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், மழை குறுக்கிட்டு இறுதிப்போட்டிக்கு இன்று ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டு, பைனல் இன்று இரவு 7.30க்கு நடைபெறுகிறது. நேற்று மழை பெய்ததால் இன்றும் குஜராத்தில் மழை பெய்யலாம் என்றும் போட்டி நடைபெறுமா என்றும் ரசிகர்கள் பெரிதும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
குஜராத்தில் போட்டி நடைபெறும் பகுதிகளில் இன்று முழுவதும் வானம் தெளிவாக இருந்துள்ளது, மழையும் பெய்யவில்லை. பகல் பொழுதுகளில் முழுவதும் வானம் மழை பெய்வதற்கான எந்த அறிகுறியும் வெளிக்காட்டவில்லை, ஆனால் போட்டி நடைபெறும் இரவு நேரத்தில் மழை பெய்வதற்கு 50% சதவீத வாய்ப்புகள் இருப்பதாக வானிலை அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. மைதானம் பெரிதும் ரன்கள் குவிக்க ஏதுவாக இருப்பதாகவே எதிர்பார்க்கப்படுகிறது.
Weather report from stadium ????️ Good news for Thala Dhoni fans ????
….
…
#NarendraModiStadium #ThalaDhoni #BCCI #IPL2023Final #peacful #SaifAliKhan #Baba #WeatherUpdate pic.twitter.com/Q61PqEvAtN— cricket ???? (@yogeshrakh222) May 29, 2023