தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வாகனங்களுக்கு தீவைத்த வழக்கில் 6 பேர் கைது!
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, வாகனங்களுக்கு தீவைத்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 22ஆம் தேதியன்று கலவரத்தில் ஈடுபட்டவர்கள் 120க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதுதொடர்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, கலில் ரஹ்மான், முகமது யூனுஸ், முகமது இஸ்ரப், வேல்முருகன், சரவணன், சோட்டையன் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.