அமைச்சர் பதவிக்காக கர்நாடக காங்கிரசுக்குள் இழுபறி!அமைச்சர் பதவி தராவிட்டால் கட்சியை விட்டு விலகப்போவதாக 20 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி?
காங்கிரசுக்கு கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 22 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்னும் ஆறு இடங்களுக்கு பெயர்களை அறிவிக்க முடியாமல் கட்சிக்குள் இழுபறி நீடிக்கிறது. அமைச்சர் பதவி தராவிட்டால் கட்சியை விட்டு விலகப்போவதாக 20 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ஆறு அமைச்சர் பதவிகளையும் தங்களுக்கே தர வேண்டும் என்று அதிருப்தியாளர்கள் கோரி வருகின்றனர். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இப்பிரச்சனை குறித்து கட்சித் தலைவர் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார். 6 இடங்களுக்கு பெயர்களை விரைவில் அறிவித்து கட்சிக்குள் ஏற்பட்ட பூசலை நிறுத்த உதவுமாறு ராகுலிடம் கோரப்போவதாகவும் கார்கே கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.