மீண்டும் ரிசர்வ் டே.. மீண்டும் தோனி… கலக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்..!

MS Dhoni

ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ் டே போல ஏற்கனவே 2019 அரையிறுதி போட்டியே தோனி விளையாடிய கடைசி போட்டி. 

நேற்று நடைபெற வேண்டிய ஐபிஎல் இறுதி போட்டியானது மழை குறுக்கிட்ட காரணத்தால் இன்று நடைபெற உள்ளது. இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத், அகமதாபாத் – நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் ரிசர்வ் டே எனப்படும் குறிப்பிட்ட தேதிக்கு அடுத்த நாள் இறுதி போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். ஆனால், சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு இது மாதிரியான சம்பவம் ஏற்கனவே நடைபெற்றுள்ளது. அதனை பகிர்ந்து ரசிகர்கள் கொஞ்சம்  கலக்கத்தில் இருக்கின்றனர்.

அதாவது 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது நியூசிலாந்து அணியுடன் அரையிறுதி போட்டி விளையாடுகையில், மழை குறுக்கிட்ட காரணத்தால் அந்த போட்டி அடுத்த நாள் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. மேலும் அதுதான் இந்திய அணிக்காக தோனி விளையாடிய கடைசி போட்டியாகும்.

இதனை குறிப்பிட்டு, மீண்டும் அதே ரிசர்வ் டேயில் தோனி விளையாடுகிறார். ஒருவேளை 2019 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் போல மீண்டும் நடந்து விடுமோ என சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்