எங்கே மோடி, எங்கே மோடி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேடுகிறார் – அண்ணாமலை பேட்டி
பிரதமர் மோடி கொடுத்த 11 மருத்துவ கல்லூரிகளை தமிழக அரசு சரியாக பராமரிக்கவில்லை என அண்ணாமலை குற்றச்சாட்டு.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எங்கே மோடி, எங்கே மோடி என்று திருமண வீடுகளில் தேடுவது போல் பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேடுவதாக அண்ணாமலை கூறியுள்ளார். இந்தியா முழுவதும் குற்றம் சுமத்த முடியாத அளவிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வழி செய்தார் பிரதமர் மோடி. 9.60 கோடி இந்தியர்களுக்கு இலவச எரிவாயு வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு விறகு அடுப்பு சமையலால் வரும் நோய்களில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலம் 3.5 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது என பாஜகவின் 9 ஆண்டுகால சாதனைகளை அண்ணாமலை விளக்கினார். இதன்பின் பேசிய அவர், பிரதமர் மோடி கொடுத்த 11 மருத்துவ கல்லூரிகளை தமிழக அரசு சரியாக பராமரிக்கவில்லை. ஜப்பான் புல்லட் ரயிலில் டிக்கெட் விலை அதிகம், அதை முதல்வர் வெளியிடவில்லை எனவும் விமர்சித்தார்.