கர்நாடகா தேர்தல் விளம்பரத்திற்கு பாஜக செலவு செய்த 44 கோடி.? சமூக ஆர்வலர் சாடல்.!

Basawaraj Bommai

கர்நாடகாவில் கடந்த பாஜக அரசு விளம்பரத்திற்கு மட்டும் 44 கோடி ரூபாய் செலவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடக சட்டமன்ற தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்து ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இந்த இங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவதற்கு முன்னர் ஆளும் பாஜக அரசு விளம்பரத்திற்கு பெரும் தொகையினை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக முந்தைய பாஜக அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த எவ்வளவு செலவினை அரசு செய்துள்ளது என்பது பற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கேட்டிருந்தார்.

அதில், டிசம்பர் 1 முதல் மார்ச் 29 வரையிலான காலகட்டத்தில் மட்டும்  கர்நாடக மாநில பாஜக அரசு பேப்பர் ஆச்சு ஊடகம் வாயிலாக விளம்பரத்திற்கு 27.46 கோடியும், மின்னணு விளம்பங்களுக்கு 16.96 கோடியும் இதர செலவுகள் என மொத்தமாக 44 கோடி ரூபாயை விளம்பரத்திற்கு அப்போதைய பாஜக அரசு செலவழித்ததாக கூறப்படுகிறது.

இவை அத்தனையும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கர்நாடகாவில் அமல்படுத்துவதற்க்கு முன்னதாக அரசு செலவு செய்த தொகை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin