மத்திய கண்காணிப்பு ஆணையராக பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா…குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம்.!

CVC Prez

மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவாவுக்கு குடியரசுத்தலைவர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

விஜிலென்ஸ்(கண்காணிப்பு) ஆணையர் பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா, இன்று ராஷ்டிரபதி பவனில் மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டார். மத்திய கண்காணிப்பு ஆணையராக இருந்த சுரேஷ் என் பட்டேலின் பதவிக்காலம் முடிந்த பிறகு, கடந்த டிசம்பரில் தற்காலிக பொறுப்பேற்ற பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா, தற்போது முழுப்பொறுப்பேற்றுள்ளார்.

ராஷ்டிரபதி பவனில் இன்று காலை நடைபெற்ற விழாவில், மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக ஸ்ரீ பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா பதவியேற்றார். அவர் குடியரசுத் தலைவர் முன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார், இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்