2000 ரூபாய் நோட்டு – பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்!

Delhi High Court

வங்கிகளின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்த அடையாள அட்டை கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். அதாவது, எந்த அடையாள சான்றும் இல்லாமல் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற அனுமதிப்பதை எதிர்த்த பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் சதீஸ் சந்திர சர்மா, சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு பொதுநல வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, செப். 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஒருவர் அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் என்ற அளவில் 2,000 ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ள முடியும், அதற்கு அடையாள ஆவணமோ, சீட்டோ தேவையில்லை என வங்கி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

மேலும், ஒருவர் ஒரு முறைக்கு ரூ.20 ஆயிரம் என்ற அளவில் எத்தனை முறை வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த சமயத்தில், 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், வங்கிகளின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்