பொதுமக்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடுவதற்கு தடை..! மும்பை காவல்துறை உத்தரவு..!

Mumbai Police

பொதுமக்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடுவதைத் தடுக்க மும்பை காவல்துறை தடை விதித்துள்ளது.

பொது அமைதிக்கு இடையூறு, மனித உயிர்கள், உடைமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் மற்றும் கலவரம் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் நடமாட்டம் மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடுவதைத் தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த மும்பை காவல்துறை, பல தரப்பிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அமைதியை சீர்குலைக்கவும், பொது அமைதிக்கு இடையூறு ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகவும், மேலும் மனித உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் பெரும் ஆபத்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த உத்தரவு ஜூன் 11 ஆம் தேதி வரை நகரத்தில் அமலில் இருக்கும் என்று மும்பை காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மும்பை காவல்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் நடமாட்டம் மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடுவது கூடாது. எந்த ஊர்வலத்திலும் ஒலிபெருக்கிகள், ஒலிபெருக்கி கருவிகள், இசைக்குழு மற்றும் பட்டாசுகளை வெடித்தல் போன்றவைக் கூடாது. இந்த உத்தரவின் ஏதேனும் மீறல் தொடர்பாக ஏற்படும் தண்டனைகளை பறிமுதல் செய்தல், அபராதம் விதிக்கப்படலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்