ஜனாதிபதி வந்தால் கங்கை நீரால் கழுவ வேண்டும் என நினைத்ததால் அழைக்கவில்லை – சபாநாயகர் அப்பாவு
ஜனாதிபதி வந்தால் கங்கை நீரால் கழுவ வேண்டும் என நினைத்ததால் தான் அவரை அழைக்கவில்லை என சபாநாயகர் அப்பாவு விமர்சனம்.
நேற்று டெல்லியில் கட்டப்பட்ட பிரமாண்டமான நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டது. இந்த நாடாளுமன்ற கட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இந்த விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இதற்கிடையில், குடியரசு தலைவரை அழைக்காததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சென்னையில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது விழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, எங்கே தவறு நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் தலைவராக தொல்.திருமாவளவன் இருக்கிறார். எந்த நிலையிலும் கொள்கை மாறாதவர், வார்த்தைகளில் கண்ணியமிக்கவர் என் தம்பி தொல்.திருமாவளவன் என புகழாரம் சூட்டினார். மேலும், ஜனாதிபதி வந்தால் கங்கை நீரால் கழுவ வேண்டும் என நினைத்ததால் தான் அவரை அழைக்கவில்லை. இதுதான் ஆர்.எஸ்.எஸ் என்றும் விமர்சித்துள்ளார்.