ஜூன் 12-ல் பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்!
ஜூன் 12-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முக்கிய கூட்டம் நடைபெறும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு.
ஜூன் 12-ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை 19 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து புறக்கணித்த நிலையில், ஜூன் 12-ஆம் தேதி பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
எதிர்கட்சிகளை திரட்டும் விதமாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சரத் பவார், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக், கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து பேசியிருந்தார். 2024 மக்களவை தேர்தலுக்கு முன் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இந்த ஆலோசனை கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.