அறவழியில் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது அரசு பயங்கரவாதம்.? சீமான் கண்டனம்.!
அறவழியில் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது அரசு பயங்கரவாதத்தை ஏவியுள்ள்ளது என சீமான் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும் பாஜக எம்பியுமான பிரித் பூஷன் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து, அவரை கைது செய்ய வேண்டும் என பல வாரங்களாக மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக வீரர்கள் டெல்லி ஜந்தர் மாந்தர் பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்று தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வீரர், வீராங்கனைகள் முயன்றனர். அப்போது காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி மொத்தமாக கைது செய்தனர். 100க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் , அவர்களுடன் ஆதரவாக போராடிய 600க்கும் மேற்பட்டோர் என அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை மூலமாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், அறவழியில் போராடிய மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மீது அரசு பயங்கரவாதத்தை ஏவியுள்ளது என காட்டமாக தனது கண்டனத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் அத்துமீறலுக்கு நீதிகேட்டு அறவழியில் போராடிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது அரசப்பயங்கரவாதத்தை ஏவுவதா?https://t.co/G7m05x6702 pic.twitter.com/D9lfXGEA5v
— சீமான் (@SeemanOfficial) May 28, 2023